search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    X
    கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    631 இடங்களில் சிறப்பு முகாம் - மாவட்டம் முழுவதும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று 1 லட்சத்து 6 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்படுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் கடந்த 2 அலைகளின் போதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    பொதுமக்களை நோயின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வருகின்ற (ஞாயிற்றுக்கிழமை) 12-ந்தேதியன்று கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. 

    திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 77 ஆயிரத்து 95 ஆக உள்ளது. 

    இதில் இதுவரை 10 லட்சத்து 58 ஆயிரத்து 704 பேர்களுக்கு முதல் தவணையும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 647 பேர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 10 லட்சத்து 18 ஆயிரத்து 391 பேருக்கு முதல் தவணையும், 43 ஆயிரத்து 187 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட வேண்டியுள்ளது. 

    அந்தவகையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று 1 லட்சத்து 6 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்படுள்ளது. இதற்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் 631 மையங்களில் அமைக்கப்பட உள்ளது.
     
    அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளி கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது. 

    காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இப்பணிக்காக 2,480 பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடவுள்ளனர். இதற்கு தேவையான மருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×