search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாகர்கோவிலில் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

    நாகர்கோவில் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவியின் தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மாணவிக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கும் தொற்று இருப்பது தெரிய வந்தது.

    நாகர்கோவில்:

    கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் திறக்கப்பட்டது.

    பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளுக்குட்பட்டு வகுப்புகளை நடத்த வேண்டுமென்று கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள சில தனியார் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    பள்ளிக்கு வரும் மாணவர்கள் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகே பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அனைத்து மாணவர்களும் முக கவசம் அணிந்து வகுப்பில் அமர வைக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் முஞ்சிறை அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவருக்கும், ரீத்தாபுரம் அரசு பள்ளி 9-ம் வகுப்பு மாணவருக்கும் கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சக மாணவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவிலில் உள்ள பள்ளிகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஒருசில பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் மாணவ-மாணவிகளுக் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

    நாகர்கோவில் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவியின் தாயாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மாணவிக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கும் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவி சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று காலை அந்த பள்ளிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    Next Story
    ×