search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லிகை
    X
    மல்லிகை

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மல்லிகை, பிச்சி பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை

    பெரும்பாலான மார்க்கெட்டுகளில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்த சில மணி நேரத்திலேயே பூக்கள் விற்று தீர்ந்தது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நெல்லை:

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சுப முகூர்த்த தினங்கள், பண்டிகைகள் உள்ளிட்ட காலக்கட்டங்களில் பூக்களுக்கு கிராக்கி அதிகரிப்பது வழக்கம்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆவணி மாதத்தில் வளர்பிறை சுபமுகூர்த்த தினங்கள் நேற்று தொடங்கி நாளை வரை உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் திருமணம், சடங்கு, புதுமனை புகுவிழா, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிகமாக உள்ளது.

    இதனால் பூக்களின் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கெட்வெல் பூ மார்க்கெட், சங்கரன்கோவில் பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பூக்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இன்று 2-வது நாளாக மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விலை ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது. வாசனை இல்லாத பூவான நந்தியாவட்டை ரூ.300-க்கும், சம்பங்கி பூக்கள் ரூ.400-க்கும் விற்கப்பட்டது. இன்று அவை ரூ.500 ஆனது.

    வழக்கமாக ஊட்டி ரோஜாக்கள் ஒரு கட்டு ரூ.60 முதல் ரூ.100 வரையிலேயே விற்கப்படும் நிலையில் இன்று அவற்றின் விலை ரூ.600 ஆக உயர்ந்தது. இதேபோல் கனகாமரம் பூக்களின் விலை ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையானது.

    இதனால் பெரும்பாலான மார்க்கெட்டுகளில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்த சில மணி நேரத்திலேயே பூக்கள் விற்று தீர்ந்தது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் கீழப்பாவூர், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    Next Story
    ×