search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தைகளுடன் போட்டோ எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
    X
    குழந்தைகளுடன் போட்டோ எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

    உடுமலை முதலைபண்ணை - சிறுவர் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளை கவரும் விதமாக முதலை பண்ணைக்கு அருகில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
    உடுமலை:

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு முன்பு பூங்கா, ராக் கார்டன் அணையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் முதலைப்பண்ணை உள்ளது. 

    இங்குள்ள பண்ணையில் பெண் முதலைகள் உள்ளிட்ட 103 நன்னீர் முதலைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவற்றை வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பார்வையிடு வதற்காக வந்து செல்வதுண்டு. 

    சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகளை கவரும் விதமாக முதலை பண்ணைக்கு அருகில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒட்டகச்சிவிங்கி சிலை தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. 

    மேலும் வனவிலங்குகளின் மார்பளவு சிலையுடன் கூடிய மர இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது.அத்துடன் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு என பலவிதமான பூச்செடிகளும் பறவைகளின் உருவங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது. 

    ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முதலைப்பண்ணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடை விலக்கி கொள்ளப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

    அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள் உற்சாகத்தோடு முதலைப் பண்ணைக்கு வந்து முதலைகளை பார்வையிட்டும், ஆங்காங்கே அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.   

    அதோடு குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களில் ஆர்வமாக விளையாடுகின்றனர். ஆனால் மறு உத்தரவு வரும் வரையிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட 3 நாட்கள் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×