search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி.
    X
    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி.

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில 15 நாட்களில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    வடமாநில தொழிலாளர்களும், பனியன் நிறுவனங்களில் இருந்து குழுவாக வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. 

    கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பயன்பெறும் வகையில் திருப்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 28-ந்தேதி முதல் 24 மணி நேரமும் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டது. 

    இதில் சுழற்சி முறையில் பணியாற்ற டாக்டர், செவிலியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு பகலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர்.
     
    வடமாநில தொழிலாளர்களும், பனியன் நிறுவனங்களில் இருந்து குழுவாக வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். புறநகர் பகுதிகளில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இதுகுறித்து மருத்துவ கல்லூரி உதவி நிர்வாக அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது:

    கடந்த 28-ந்தேதி முகாம் தொடங்கியதில் இருந்து 15 நாட்களில் 490 பேருக்கு கோவேக்சினும், 9,561 பேருக்கு கோவிஷீல்டும் என மொத்தம் 10 ஆயிரத்து 51 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது என்றார்.
    Next Story
    ×