search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கூலி உயர்வு கோரிக்கை - விசைத்தறியாளர்கள் ஏமாற்றம்

    கூலி உயர்வு ஒப்பந்தத்தை சட்டமாக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் அறிவிப்புகள் இல்லை.
    பல்லடம்:

    விசைத்தறிகளின் வளர்ச்சிக்கான எந்தவித அறிவிப்புகளும் சட்டமன்ற மானிய கோரிக்கையில் நிறைவேறாததால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

    இதுகுறித்து திருப்பூர்- கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:

    கூலி உயர்வு பிரச்சினை, தானியங்கி தறி அதிகரிப்பு, வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் மிகவும் நலிந்து வருகிறது. தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். 

    தேர்தல் பிரசாரத்தில் கூறப்பட்ட வாக்குறுதியின்படி விசைத்தறிக்கான 750 யூனிட் மின்சாரம், 1,000 யூனிட்டாக உயர்த்தப்படும் என மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். 

    காப்பீடு திட்டம், விசைத்தறிகளின் வளர்ச்சிக்கான எந்தவித அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. கூலி உயர்வு ஒப்பந்தத்தை சட்டமாக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் அறிவிப்புகள் இல்லை. தோட்ட தொழிலாளர், 100 நாள் திட்ட பணியாளருக்கு அரசு கூலியை நிர்ணயிக்கிறது. 

    ஆனால் 25 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்களை கொண்ட விசைத்தறி கூலி பிரச்சினை குறித்து கண்டுகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. இது தமிழகம் முழுவதும் உள்ள 6 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறியாளர்களுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். 
    Next Story
    ×