search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இந்து முன்னணி சார்பில் 1.25 லட்சம் விநாயகர் சிலை பிரதிஷ்டை - மாநில செயலாளர் தகவல்

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வேண்டி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் பகுதி இந்து மக்கள் கூட்டமைப்பு சார்பில் மங்கலம் நால்ரோட்டில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற வேண்டி பிரார்த்தனை கூட்டம் நடந்தது.

    கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர்குமார் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

    இதில் பங்கேற்ற கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகையில்:

    விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் தடை விதிக்கின்றனர். தெய்வ வழிபாட்டுக்கு தடைவிதிப்பது அனாவசியமானது.

    ஆன்மீகம் சார்ந்த முடிவுகள் எடுக்கும்முன் மதம் சார்ந்தவர்களை அழைத்து ஆலோசனைகள் நடத்த வேண்டும். வீட்டுக்குள் சதுர்த்தி கொண்டாடுவது எப்படி? சதுர்த்தி கொண்டாடக்கூடாது என முற்றிலும் தடைவிதிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

    கோவிலில் மொட்டை அடிக்க இலவசம் என தேவையற்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பேதங்களை களையும் வகையில் கோவில்களில் வழிபாட்டு கட்டணங்களைதான் ரத்து செய்ய வேண்டும் என்றார்.

    இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார் கூறியதாவது:

    வரும் 10-ந்தேதி தமிழகம் முழுவதும் வீடுகளில் 10 லட்சம் விநாயகர், அது தவிர இந்து முன்னணி சார்பில் 1.25 லட்சம் விநாயகர் சிலை வைக்கப்பட உள்ளது. தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தயாராக உள்ளோம்.

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி வேண்டி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். 

    பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிட்டால்  அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்து முன்னணி மாநில நிர்வாக குழு முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×