search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில தேர்தல் ஆணையம்
    X
    மாநில தேர்தல் ஆணையம்

    உள்ளாட்சி தேர்தல் - இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

    அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தது.
     
    இதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நடவடிக்கையையும் தொடங்கி உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வரும் 13-ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இதற்கிடையே, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் திடீரென ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் 9 புதிய மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வந்தாலும் இவற்றை சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் நடத்தி முடிக்க சாத்தியமில்லாத சூழல் உருவாகி உள்ளது. எனவே தேர்தல் நடத்த மேலும் கால அவகாசம் தேவை” என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என்றும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×