search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மார்த்தாண்டத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி- புதிதாக 16 பேருக்கு தொற்று

    கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தையொட்டி உள்ள கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை, நெட்டா, காக்கவிளை, சூழால் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    எல்லை பகுதிகளில் உள்ள கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று மாவட்டம் முழுவதும் 5,244 பேரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

    இதில், 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் ஆசாரிபள்ளம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் 46 பேர் உள்ளனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் 39 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை 58,800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 56,590 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

    மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 62 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்புடன் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். முக கவசம் அணியாமல் சுற்றி திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 434 பேரிடம் இருந்து ரூ.88 ஆயிரம் வசூலானது.

    கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 12,642 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 2,958 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 7,54,970 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 1,71,647 பேருக்கு 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இன்றும் மாவட்டம் முழுவதும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
    Next Story
    ×