search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு சார்பில் கனிமொழி எம்.பி, தலைமையில் அமைச்சர்கள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    X
    அரசு சார்பில் கனிமொழி எம்.பி, தலைமையில் அமைச்சர்கள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாட்டின் பெருமைகளை வ.உ.சி. வழியில் பாதுகாக்க வேண்டும்- கனிமொழி

    யாருமே எதிர்பார்க்காத வகையில் வ.உ.சி.யை போற்றும் வகையில் 14 அறிவிப்புகளை மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
    ஒட்டப்பிடாரம்:

    சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி.யின் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள், பல்வேறு அமைப்பு என ஏராளமானவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அரசு சார்பில் கனிமொழி எம்.பி. தலைமையில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் 100-வது பிறந்த நாளை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அழைத்து வந்து அவரது சிலையை திறந்து வைத்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார் கலைஞர். அவரது வழியில் தற்போது முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகச்சிறப்பாக, தூத்துக்குடி மக்களே வியக்கும் வண்ணம், பலரும் பாராட்டும் வகையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் வ.உ.சி.யை போற்றும் வகையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    கப்பலோட்டிய தமிழன் தன் வாழ்நாளில் இந்திய சுதந்திரத்திற்காக மட்டுமல்லாது தமிழ் மொழிக்காகவும், தமிழ் அடையாளங்களுக்காவும், சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். தொழிலாளர் நலனுக்காக தொடர்ந்து போராடிய தலைவர் அவர். வ.உ.சி.யின் வழியில் நாட்டின் அடையாளங்களை, தமிழ்நாட்டின் பெருமைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, யூனியன் கவுன்சிலர் புதுக்கோட்டை முத்துக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து வ.உ.சி.யின் கொள்ளு பேத்தி செல்வி தனது கணவர் முருகானந்தத்துடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


    Next Story
    ×