search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை

    மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோவிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று இந்து அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேகர் பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,

    * கோவில்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்காக மொட்டை அடிப்பதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    * அருட்பிரகாச வள்ளலார் புகழை போற்றும் வகையில் வள்ளலார் சர்வதேச மய்யம் வடலூரில் அமைக்கப்படும்.

    * இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உட்பட தமிழகத்தில் பத்து இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 150 கோடி செலவில் தொடங்கப்படும்.

    * தமிழர் திருநாளாம் தை திருநாளில் ரூபாய் 10 கோடி செலவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடை மற்றும் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்.

    * மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கோவிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.

    கோவில்

    * கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபதிற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

    * தமிழகத்தில் இந்த வருடத்திற்குள் ரூ.1,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்படும்.

    * அர்ச்சகர்களுக்கு ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

    * அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி காலத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.1000 இல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    Next Story
    ×