search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    24 மணி நேரமும் இயங்கும் கோவிட் தடுப்பூசி மையத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
    X
    24 மணி நேரமும் இயங்கும் கோவிட் தடுப்பூசி மையத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

    சென்னையில் 15 இடங்களில் 24 மணிநேரமும் தடுப்பூசி- அமைச்சர் தொடங்கிவைத்தார்

    80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிபோடுவதை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி இருக்கிறது.

    பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று ஊசி போட்டுக் கொள்வதை தவிர்க்க அனைத்து வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டத்தையும் மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

    தற்போது செயல்பட்டு வரும் முகாம்களில் காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே ஊசி போடப்படுகிறது.

    பல்வேறு பணிகள் காரணமாக குறிப்பிட்ட நேரத்தில்
    தடுப்பூசி
    போட முடியாமல் பலர் சிரமப்படுகிறார்கள்.

    அமைச்சர் கேஎன் நேரு


    இந்த சிரமத்தை போக்க 24 மணி நேரமும் செயல்படும் முகாம்களை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அடையாறில் அமைச்சர் கே.என்.நேரு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மொத்தம் 15 இடங்களில் முழுநேர முகாம்கள் செயல்படும். இந்த முகாம்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாத வகையிலும் ஊசிகள் வீணாகாமலும் பார்த்துக்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×