search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கனமழைக்கு வாய்ப்புள்ள 10 மாவட்டங்கள்

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை மைய அதிகாரி கீதா கூறியதாவது:-

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

    இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

    நாளை 4-ந் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    மழை

    5-ந் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், 6, 7-ந் தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏத்தாப்பூர் (சேலம்) 13 செ.மீ., பட்டுக்கோட்டை, மணமேல்குடி தலா 9, ராசிபுரம், மதுக்கூர் தலா 8, முத்துப்பேட்டை, மணப்பாறை தலா 7, பாப்பிரெட்டிபட்டி, அரிமளம் தலா 6, அரியலூர், புவனகிரி, செங்கம் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×