search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ராமநாதபுரம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை- விவசாயிகள் மகிழ்ச்சி

    உழவு செய்து வைத்திருந்த நிலையில் மீண்டும் மழை வராதா? என்ற ஏக்கத்தில் இருந்த விவசாயிகளுக்கு இந்த மழை பெரும் மகிழ்ச்சியை தந்து உள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நேற்று இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் ஓடிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருந்து வந்து நிலையில் இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மகிழச்சியுடன் காணப்பட்டனர்.

    உழவு செய்து வைத்திருந்த நிலையில் மீண்டும் மழை வராதா? என்ற ஏக்கத்தில் இருந்த விவசாயிகளுக்கு இந்த மழை பெரும் மகிழ்ச்சியை தந்து உள்ளது.

    மழை காரணமாக 'வழக்கம்' போல் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    இன்று காலை வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக வட்டாணத்தில் 31.30 மி.மீ, தீர்த்தாண்டதனத்தில் 27, ராமநாதபுரத்தில் 18, திருவாடானை 14.60, தொண்டி 12, பரமக்குடி8.80, ராமேசுவரத்தில் 3.30,முதுகுளத்தூர் 2.20, பாம்பன் 1.60, தங்கச்சிமடம் 1.10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    கடலாடி, வாலிநோக்கம், கமுதி, பள்ளமோர்க்குளம், ஆர்.எஸ்.மங்கலம், மண்டபம் ஆகிய ஊர்களில் மழை பதிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது,

    Next Story
    ×