search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சென்னை, மதுரை உள்பட ஐந்து மண்டலங்களில் ஆர்ப்பாட்டம் - டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

    20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்து மண்டலங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

    திருச்சி:

    தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் தனியார் ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் முருகானந்தம், துணைத்தலைவர் ராமலிங்கம், இளங்கோவன், கல்யாண சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் கூறியதாவது:-

    டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலம் வரை ஊதியம் வேண்டும். மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்களை பணியிட மாற்றம் செய்யும் பொழுது சீனியாரிட்டி அடிப்படையில் அந்தந்த தாலுகாவில் பணியமர்த்தம் செய்ய வேண்டும்.

    காலி அட்டைப்பெட்டிகளை டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக கடைகளுக்கு வந்து எடுத்துச் செல்ல வேண்டும். டாஸ்மாக் கடையில் வாடகை மின் கட்டமைப்பு வகைகளை நேரடியாக ஆன்லைன் மூலமாக டாஸ்மாக் மாவட்ட நிர்வாகமே செலுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் எங்களுக்கு இருக்கிறது.

    இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் வருகிற 6-ந்தேதி சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய ஐந்து மண்டலங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×