search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை பெரியகுளத்தில் தண்ணீர் தேங்காததால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்

    சமீபத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் வழியாக குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    உடுமலை:

    உடுமலை ஏழு குள பாசன திட்டத்தின் கீழ் 2,786 ஏக்கர் நிலப்பரப்பு நேரடியாக பாசன வசதி பெறுகிறது. மேலும் சுற்றுப்பகுதி கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் குறையாமலும் பாதுகாக்கப்படுகிறது. அதன்படி சமீபத்தில் திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் வழியாக குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் சென்றடைந்த நிலையில் நகரை ஒட்டி அமைந்துள்ள பெரியகுளத்தில் மட்டும் தண்ணீர் தேக்கமடையாமல் உள்ளது. இதனால் குளத்தின் மேற்பரப்பு வறண்டு உள்பகுதி மண் பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

    பல ஆண்டுகளுக்கு பின் குளம் தூர்வாரப்பட்டும் தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. குளத்திற்கான வழங்கு கால்வாய் மட்டுமின்றி கரையை சீரமைக்க துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் குளத்தை ஒட்டி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். அப்போது மட்டுமே குளத்திற்கு முறையாக தண்ணீர் வந்தடைந்து தேக்கமாகும் என்றனர்.
    Next Story
    ×