search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பராமரிப்பின்றி கிடக்கும் குன்னத்தூர் வாரசந்தையை படத்தில் காணலாம்.
    X
    பராமரிப்பின்றி கிடக்கும் குன்னத்தூர் வாரசந்தையை படத்தில் காணலாம்.

    பராமரிப்பின்றி கிடக்கும் குன்னத்தூர் வாரசந்தை - புல், புதர்கள் அகற்றப்படுமா?

    கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக சந்தை நடைபெறாமல் இருந்ததால் பராமரிப்பின்றி புற்கள் முளைத்து விட்டன.
    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் கோவை, ஈரோட்டை விட பெரிய சந்தை உள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஞாயிறு, திங்கள் என இரண்டு நாட்கள் நடைபெற்று வந்த குன்னத்தூர் சந்தை தற்போது திங்கட்கிழமை மட்டும் நடைபெற்று வருகிறது.
     
    இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் ஆடு, மாடுகள் மட்டுமின்றி நாட்டுக் கோழி, கறிகோழி, கட்டு சேவல்கள் அதிகமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஈரோடு, கோபி, சத்தி, புளியம்பட்டி, பவானி, அந்தியூர், மேட்டூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் செம்மறி மற்றும் வெள்ளாடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 

    ‌இதனை வாங்குவதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வருகின்றனர்.‌ அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படும் சந்தையின் பரப்பளவு நாளுக்கு நாள் குறுகிக்கொண்டே வருகிறது. இதற்கு காரணம் ஆங்காங்கே புதர்கள் மண்டி கிடக்கின்றன. 

    கொரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக சந்தை நடைபெறாமல் இருந்ததால் பராமரிப்பின்றி புற்கள் முளைத்து விட்டன. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு மீண்டும் சந்தை செயல்பட தொடங்கியுள்ளது. எனினும் பராமரிப்பு பணிகள் ஏதும் செய்யப்படவில்லை. 

    இதனால் சந்தையில் கடை போடும் இடங்களில் புல், புதர்கள் அதிக அளவு முளைத்துள்ளதால் வியாபாரிகள் கடை  அமைக்க பெரும் சிரமப்பட்டு வருகிறார்கள். பேரூராட்சி அதிகாரிகள் சந்தையில் முளைத்துள்ள புல், புதர்களை அகற்றி சந்தை அமோகமாக நடக்க வழி செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×