search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்ன வெங்காயத்தை பிரித்தெடுப்பவர்களை படத்தில் காணலாம்.
    X
    சின்ன வெங்காயத்தை பிரித்தெடுப்பவர்களை படத்தில் காணலாம்.

    செங்கோட்டை பகுதியில் சின்ன வெங்காயம் விலை குறைவால் விவசாயிகள் கவலை

    சின்னவெங்காயத்திற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும். விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த இலத்தூர், அச்சன்புதூர், சிவநல்லூர், கரிசல் குடியிருப்பு, சிவராமப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக பூ மகசூலான தக்காளி, வெண்டை, சின்ன வெங்காயம், மிளகாய், சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி பணி நடைபெறும்.

    ஆனால் இந்த முறை மழை பொய்த்ததால் நிலத்தடி நீர் மூலம் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காயம் விவசாயம் நடைபெற்றது. தற்போது சின்னவெங்காயம் அறுவடை கடந்த மாதத்தில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தொடக்கத்தில் ரூ.40-க்கு மேல் விலை இருந்தது. இதனால் வருமானம் அதிகம் கிடைக்கும் என விவசாயிகள் கருதி மகிழ்ச்சியடைந்த நிலையில் தற்போது சின்னவெங்காயம் விலை ரூ.22-க்கும் குறைவாக போய்விட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது பற்றி விவசாயி கூறுகையில், எங்கள் பகுதியில் நெல்லுக்கு அடுத்த படியாக சின்னவெங்காயம் அதிகமாக சாகுபடி செய்கிறோம். 2 மாத பயிரான சின்னவெங்காயத்திற்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும். விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம்.

    ஒரு ஏக்கருக்கு உழுவது முதல் பூச்சிக்கு மருந்து அடித்தல், உரம் களை எடுத்தல், அறுவடை வரை ரூ.1 லட்சத்திற்கும் கூடுதலாக செலவாகிறது. அதற்கு தகுந்தாற்போல் விலை ரூ.40-க்கு விற்றால் தான் லாபம் இருக்கும்.

    முந்தைய காலங்களில் இப்பகுதியில் நிலம் இருக்கும் விவசாயிகள் பந்தாடல் அமைத்து வெங்காயத்தை பாதுகாப்பதாகவும், தற்போது மழை காலம் என்பதால் உடனே விற்க வேண்டியுள்ளது. இம்முறை அதிக லாபம் கிடைப்பதால் பெரும்பாலானோர் உடனுக்குடன் விற்பனை செய்கின்றனர்.

    இதனை பயன்படுத்தி இடைத்தரகர்கள் கொள்முதல் விலையை குறைத்து கேட்கின்றனர். இதனால் ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. பாடுபட்ட நாங்கள் லாபம் ஈட்ட முடியாத நிலையில் உள்ளோம்.

    எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்கவும், மழைகாலங்களில் உரிய முறையில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க வழிவகை செய்யவேண்டும் என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×