search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை- ஐகோர்ட் அதிரடி உத்தரவு

    கொடநாடு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொடநாடு வழக்கில் மேல் விசாரணை செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தார். அவர் தரப்பில், 'சாட்சிகள் யாரிடமும் சொல்லாமல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சிலரிடம் மட்டும் சொல்லிவிட்டு மேல் விசாரணையை காவல் துறை நடத்தி வருகிறது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அதுகுறித்து குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் மறு விசாரணை நடத்த முடியாது. இந்த வழக்கில் நீதிமன்ற அனுமதியின்றி மறு விசாரணை செய்யப்பட்டுள்ளது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதே நேரத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஒரு குற்றவழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாக கண்டறிந்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தவே காவல் துறை சார்பில் விசாரணையை விரிவுபடுத்துவதற்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சிலர் விசாரணையை விரிவுபடுத்த வேண்டும் என்று கடிதம் அளித்துள்ளார்கள்' என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து தமிழக காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் அனைத்தும் யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டிருக்கிறது. மனுதாரர் காவல் துறையின் சாட்சியல்ல. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருடன் நெருக்கமாக உள்ளவர். விரிவான விசாரணை முடிந்தவுடன், அதன் அறிக்கை நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்யப்படும். அது குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று சுட்டிக்காட்டினார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிமன்றம், 'ஒரு வழக்கில் எந்த நேரத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும். எனவே காவல் துறை விசாரிக்க எந்தவொரு தடையும் இல்லை. விசாரணை அறிக்கை தாக்கல் செய்தவுடன் அது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும்' என்று கூறியது. மேலும் மனுதாரரின் வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.


    Next Story
    ×