search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    உள்ளாட்சி தேர்தலில் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது - கமல்ஹாசன்

    தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் கட்சி கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலிலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டது. பாராளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்ற அந்தக் கட்சி சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் மட்டும் வெற்றியை நெருங்கி வந்து குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.

    தேர்தலுக்கு பின் கட்சியின் தலைமை நிர்வாகிகள் சிலர் வெளியேறினார்கள். இதனையடுத்து கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்த கமல்ஹாசன் அடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கு உற்சாகமாக தயாராகும்படி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

    இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தமிழக, பாண்டிச்சேரி நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை கூட்டம்  நேற்று நடந்தது. 

    உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது கூட்டணியுடன் போட்டியிடுவதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் கேட்டறிந்த‌தாக கூறப்படுகிறது.

    மேலும், உள்ளாட்சி தேர்தலில் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி என கமல்ஹாசன் தெரிவித்ததாக தகவல் வெளியானது. 
    Next Story
    ×