search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    அரசு பஸ்களில் 15 லட்சம் பெண்கள் இலவச பயணம்

    தமிழக அரசு அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் அரசு  பேருந்துகளில் 15.11 லட்சம் மகளிர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.  இது குறித்து திருப்பூர்  மாவட்ட கலெக்டர்  வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு அரசுப்பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருந்தது.

    இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர்-1, திருப்பூர்-2, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய பணிமனைகளின் கீழ் இயங்கும்
    196 அரசு பேருந்துகளில் 15 லட்சத்து 11 ஆயிரத்து 109 மகளிரும், 7,869 மாற்றுத் திறனாளிகளும், 712 மாற்றுத் திறனாளிகளின் உதவியாளர்களும், 1,636 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 15 லட்சத்து 21 ஆயிரத்து 236 பேர்  இலவசமாகப் பயணம் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×