search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கனமழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வெப்பசலனம் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

    நாளை (26-ந்தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

    மழை

    27-ந்தேதி தமிழ்நாட்டின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், திண்டுக்கல், நீலகிரி, சேலம், தேனி, திருப்பூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

    28-ந்தேதி தமிழ்நாட்டின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

    29-ந்தேதி தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் மேற்கண்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.

    கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 14 செ.மீ மழை பதிவாகி இருந்தது. அதற்கு அடுத்த படியாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 9 செ.மீ, திருத்தணியில் 6 செ.மீ மழை பெய்து இருந்தது.

    இன்றுமுதல் 29-ந்தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக் கூடும்.

    இதனால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×