search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூலனூரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முருங்கைக்காய்களை படத்தில் காணலாம்.
    X
    மூலனூரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முருங்கைக்காய்களை படத்தில் காணலாம்.

    மூலனூர் கொள்முதல் நிலையத்தில் முருங்கைக்காய் வரத்து அதிகரிப்பு

    கடந்த சில வாரங்களாக வட மாநில வியாபாரிகள் முருங்கைக்காய் கொள்முதல் செய்ய வரவில்லை.
    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி பகுதியில் தனியார் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு முருங்கைக்காய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மூலனூர், கன்னிவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த முருங்கைக்காய்களை இங்கு கொண்டு வருகிறார்கள்.

    மேலும் மோகனூர் பகுதியில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம் பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக்காய்களை வாங்கி செல்கின்றனர்.

    மேலும் முருங்கைக்காய்களை மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அவற்றை கொள்முதல் செய்து பிறமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். இதற்கிடையில் கடந்த சில வாரங்களாக வட மாநில வியாபாரிகள் முருங்கைக்காய் கொள்முதல் செய்ய வரவில்லை.

    மேலும் மூலனூர் பகுதிகளில் விளைச்சல் அதிகமானதால் கடந்த இரண்டு வாரங்களாக வரத்து அதிகமாகி விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முருங்கைக்காய் இந்த வாரம் ரூ.25க்கும், மரம் முருங்கை ரூ.24க்கும், கரு முருங்கை ரூ.26க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்தவாரம் சுமார் 10 டன் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
    Next Story
    ×