search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு திட்டம்: ரத்து செய்த அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும்- டி.டி.வி. தினகரன்

    2020-21-ம் ஆண்டில் நெல்லுக்கு விவசாயிகளால் செய்யப்பட்ட பயிர் காப்பீட்டின் நிலை என்ன என்பது குறித்து அரசு தெளிவுப்படுத்த வேண்டும் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீட்டுத் திட்டத்தை தி.மு.க. அரசு தன்னிச்சையாக ரத்து செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    இயற்கை சீற்றம் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கிடையே நெல் சாகுபடி மேற்கொண்டு வரும் விவசாயிகளின் நம்பிக்கையைக் குறைக்கும் வகையிலான இந்த அறிவிப்பினை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    2020-21-ம் ஆண்டில் நெல்லுக்கு விவசாயிகளால் செய்யப்பட்ட பயிர் காப்பீட்டின் நிலை என்ன என்பது குறித்தும் அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

    வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டதையே பெருமையாக சொல்லி கொள்ளும் தி.மு.க. அரசு, நிதிச்சுமை என்று கூறி நெல் விவசாயிகளின் உரிமையைப் பறிக்க நினைப்பதை அனுமதிக்க முடியாது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
    Next Story
    ×