
ஆறுமுகநேரி:
ஆத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தலைபண்ணை பூந்தோட்டம் பகுதியில் நின்றிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதி கீழத்தெருவை சேர்ந்த மாரிச்செல்வம் (வயது24) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.