search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குவிலென்ஸ்.
    X
    குவிலென்ஸ்.

    விபத்துக்களை தவிர்க்க உடுமலை சாலையில் குவிலென்ஸ் பொருத்தம்

    மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் இத்தகைய குவிலென்ஸ் பொருத்தப்படும்.
    உடுமலை:

    உடுமலையில் இருந்து திருமூர்த்திமலை செல்லும் சாலை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள சாலையில் பெரியகுளம் அருகே வாளவாடி செல்லும் கிராம இணைப்பு ரோடு பிரிகிறது.

    இந்த சந்திப்பு பகுதியில் வேகத்தடை இல்லாத நிலையில் வாளவாடி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் திருமூர்த்திமலை சாலையில் இணையும் போது விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சந்திப்பு பகுதியில் விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து போலீஸ் சார்பில் ‘குவிலென்ஸ்’ பொருத்தப்பட்டுள்ளது. 

    மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் இத்தகைய குவிலென்ஸ் பொருத்தப்படும். சந்திப்பு பகுதியில் பிரதான ரோட்டில், வரும் வாகனங்கள், இணைப்பு ரோட்டில் வரும் வாகன ஓட்டிகளுக்கு எளிதாக தெரியும் வகையில் இத்தகைய அமைப்பு வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×