search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி, ராதாகிருஷ்ணன்
    X
    தடுப்பூசி, ராதாகிருஷ்ணன்

    தமிழகத்தில் 21 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

    தமிழகத்திற்கு இன்று 6.93 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்த நிலையில், கையிருப்பு 21 லட்சம் டோஸ்களாக அதிகரித்துள்ளது.
    கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். கொரோனா 3-வது அலை தாக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவி வருவதால் அதற்குள்ளாக அதிகபட்சமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

    மத்திய அரசிடமிருந்து தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது. நேற்று 5.76 லட்சம் கோவிஷீல்டு புனேயில் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று 6 லட்சத்து 93 ஆயிரத்து 970 கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தன. மாநில கிடங்கிற்கு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவைக்கேற்ப பிரித்து அனுப்பப்படுகிறது.

    தமிழகத்தில் தற்போது வரை 2.7 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கையிருப்பாக 21 லட்சம் டோஸ்கள் உள்ளன. மத்திய அரசு தேவையான தடுப்பூசி டோஸ்கள் வழங்குவதாக உறுதி அளித்துள்ளன என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறுகையில், இந்த மாதத்திற்கான ஒதுக்கீடு வந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு வழங்கி வரும் தடுப்பூசிகள் உடனுக்குடன் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இந்த மாதம் 57 லட்சத்து 86 ஆயிரத்து 340 தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் கோவிஷீல்டு 23 லட்சத்து 63 ஆயிரத்து 900. கோவேக்சின் 9 லட்சத்து 12 ஆயிரத்து 550 தடுப்பூசிகள் என மொத்தம் 32 லட்சத்து 76 ஆயிரத்து 640 தடுப்பூசிகள் இதுவரையில் பெறப்பட்டுள்ளன. இன்னும் 26 லட்சத்து 97 ஆயிரத்து 470 தடுப்பூசிகள் வரவேண்டி உள்ளது. கடந்த மாதத்தை விட கூடுதலாக தடுப்பூசிகள் இந்த மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
    Next Story
    ×