search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஊரடங்கில் உரக்கடைகளுக்கு தளர்வு - விவசாயிகள் வலியுறுத்தல்

    கிராமப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயம் மற்றும் பால் உற்பத்தி சார்ந்த பணிகளை முடிக்க மாலை நேரமாகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உரக்கடைகளை இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இதுகுறித்து மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கிராமப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயம் மற்றும் பால் உற்பத்தி சார்ந்த பணிகளை முடிக்க மாலை நேரமாகிறது. அதன் பின்பே கால்நடைகளுக்கு தீவனம் வாங்கவும், விவசாயப் பணிக்கு உரம், மருந்து வாங்கவும் கடைக்குச் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது. கடந்தாண்டு ஊரடங்கின் போதும் உரம் மற்றும் தீவன விற்பனை கடைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது. 

    விவசாயிகள் நலன் கருதி உரக்கடைகள் இரவு 8 மணி வரையாவது இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×