search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாவூர்சத்திரத்தில் மினிலாரியில் கடத்திய குட்கா பறிமுதல்- 2 வாலிபர்கள் கைது

    நெல்லையின் புறநகர் பகுதியில் வைத்து குட்கா மூட்டைகளை எடுத்து கொண்டு கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
    நெல்லை:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சுரேஷ் தலைமையிலான போலீசார் பாவூர்சத்திரம் ரெயில்வேகேட் பகுதியில் நேற்று நள்ளிரவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவிற்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் அந்த வழியாக வந்த லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட குட்கா மூட்டைகள் இருந்தது. சுமார் 57 மூட்டைகளில் புகையிலை உள்ளிட்ட பொருட்கள் இருந்தது.

    இதையடுத்து போலீசார் மினி லாரி டிரைவரான பாவூர்சத்திரம் அருகே உள்ள அரியங்காவூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி(வயது 34) மற்றும் அவருடன் வந்த கல்லூத்து பகுதியை சேர்ந்த முருகன்(31) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் குட்கா மூட்டைகள் கேரளாவிற்கு கடத்தப்படுவதாகவும், நெல்லையில் இருந்து கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.

    மேலும் பெங்களூருவில் இருந்து கண்டெய்னர் லாரிகளில் இந்த குட்கா மூட்டைகள் நெல்லைக்கு வருகிறது. நெல்லையின் புறநகர் பகுதியில் வைத்து குட்கா மூட்டைகளை எடுத்து கொண்டு கேரளாவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இச்சம்பவத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? இதன் பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்து இன்ஸ் பெக்டர் சுரேஷ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×