search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவசங்கர் பாபா
    X
    சிவசங்கர் பாபா

    பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

    பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த வாக்குமூலம் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
    சென்னை:

    செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்த 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பள்ளியின் நிர்வாகி சிவசங்கர் பாபாவை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்குகளில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த வாக்குமூலம் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை ஐகோர்ட்

    சிவசங்கர் பாபா சார்பில் மூத்த வக்கீல் ரமேஷ் ஆஜராகி, “கடந்த 2015, 2018, 2020-ம் ஆண்டுகளில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து 3 மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். இதனடிப்படையில் 3 வழக்குகளை ஒரே நாளில் பதிவு செய்த போலீசார், ஒரே நேரத்தில் சிவசங்கர் பாபாவை கைது செய்யாமல், வெவ்வேறு தேதிகளில் கைது செய்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை வழங்கக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ்
    சிவசங்கர் பாபா
    மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்றால், அவருக்கு தானாகவே ஜாமீன் கிடைத்து விடும் என்பதால், போலீசார் 3 முறை கைது செய்துள்ளனர்” என்று வாதிட்டார்.

    அரசு தரப்பில், “சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. அதனால், மாணவிகளின் வாக்குமூலத்தை படித்து பார்த்து ஜாமீன் மனு மீதான உத்தரவை பிறப்பிக்க வேண்டும்“ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பித்தார்.

    அதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மனுதாரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அது தொடர்பாக பதிவான வழக்குகளில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க இயலாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று நீதிபதி கூறியுள்ளார்.


    Next Story
    ×