search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் புதிய சொத்துவரி-பெயர் மாற்றத்துக்கு 236 பேர் விண்ணப்பம்

    இதுபோல் சிறப்பு முகாம் நாளை 16-ந்தேதி வார்டு எண்.1,5,6 ஆகிய பகுதிகளுக்கு அனுப்பர்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நடக்கிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சார்பில் புதிய சொத்துவரி விதித்தல், பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம் திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் செட்டிப்பாளையம் வரி வசூல் மையம், 2-வது மண்டலத்தில் பூலுவப்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, 3-வது மண்டலத்தில் கருமாரம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, 4-வது மண்டலத்தில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்றது.

    இந்த மையங்களை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார். முகாம்களில் காலியிட மனை வரிக்கு 14 பேரும், புதிய சொத்துவரிக்கு 54 பேரும், சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு 88 பேரும், குடிநீர் இணைப்புக்கு 75 பேரும், குடிநீர் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு 3 பேரும், பாதாள சாக்கடை இணைப்புக்கு 2 பேரும் என மொத்தம் 236 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    இதுபோல் சிறப்பு முகாம் நாளை 16-ந்தேதி வார்டு எண்.1,5,6 ஆகிய பகுதிகளுக்கு அனுப்பர்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியிலும், வார்டு எண்.20, 28 29,30 ஆகிய பகுதிகளுக்கு பிச்சம்பாளையம் புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும், வார்டு எண்.34,35,38,39 ஆகிய பகுதிகளுக்கு நல்லூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், வார்டு எண்.49,56 ஆகிய பகுதிகளுக்கு கருவம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது.
    Next Story
    ×