search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆதார் சேவைக்காக அதிகாலையிலேயே குவியும் பொதுமக்கள்

    வங்கியில் தினமும் 40 பேருக்கு மட்டுமே ஆதார் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
    அவிநாசி:

    அவிநாசி தாலுகா அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையம் தவிர, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியில் ஆதார் இ-சேவை மையம் செயல்படுகிறது.

    கடந்த ஒரு மாதமாக  தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் இ-சேவை மையம் செயலிழந்துள்ள நிலையில் பொதுமக்கள், பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று ஆதார் சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

    வங்கியில் தினமும் 40 பேருக்கு மட்டுமே ஆதார் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்பதால்  ‘டோக்கனை’ வாங்க அதிகாலை 5:30 மணிக்கெல்லாம்  வங்கி வாசலில் பொதுமக்கள் காத்துக்கிடந்து வாங்கி செல்கின்றனர். 

    இதனால் நாள் முழுக்க வேலையை விட்டு வங்கி வாசலில் மக்கள் காத்திருக்க வேண்டியது உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி ஆதார் சேவையை காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×