search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    X
    பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடங்களை 30 சதவீதம் குறைக்க முடிவு?

    சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
    சென்னை:

    கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ந் தேதி முதல் நேரடியாக வகுப்புகள் துவங்க உள்ளன.

    வழக்கமாக ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் 3 மாதங்கள் கழித்து பள்ளிக்கூடங்கள் திறப்பதால் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடங்களை 30 சதவீதம் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    சென்னை தலைமை செயலகத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்   அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    பள்ளிகள் திறக்கப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

    அதோடு பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைப்பதற்கும் இதில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

    கடந்த ஆண்டு 30 சதவீதம் பாடத்திட்டங்களை குறைத்துதான் வகுப்புகள் எடுக்கப்பட்டன. ஆனால் தேர்வு நடத்தப்படாததால் ‘ஆல் பாஸ்’ அறிவிக்கப்பட்டது.

    தற்போது சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

    எனவே தமிழக அரசும் கடந்த ஆண்டைபோல் 30 சதவீத பாடத்திட்டங்களை குறைத்து அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது.



    Next Story
    ×