search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சாதிப்பெயரை நீக்குவது தலைவர்கள் அடையாளத்தை அழிக்கும் முயற்சி-இந்து முன்னணி கண்டனம்

    தி.மு.க. ஆட்சியில் ஆட்சேபனைக்குரிய வகையில் பாடநூல் கழகம், நிறுவனங்களில் பலர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
    திருப்பூர்:

    முக்கிய தலைவர்கள் பெயரில் சாதிப்பெயரை நீக்குவது தலைவர்கள் அடையாளத்தை அழிக்கும் முயற்சி என இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சியில்  ஆட்சேபனைக்குரிய வகையில் பாடநூல் கழகம், நிறுவனங்களில் பலர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதன்பின் பல திட்டங்கள் இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. தற்போது பாடநூல்களில் உள்ள தலைவர்கள், அறிஞர்கள் பெயரில் உள்ள சாதிப்பெயரை நீக்கும் நடவடிக்கை, தலைவர்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியே.

    பூலித் தேவன், அழகுமுத்துக்கோன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வ.வே.சு. ஐயர், முத்துராமலிங்க தேவர், குமாரசாமி ராஜா, ஓமந்தூர் ரெட்டியார், முத்துலட்சுமி ரெட்டி, ரவீந்திர நாத் தாகூர், வல்லபாய் படேல் போன்ற தலைவர்கள் பெயரில் சாதியை நீக்கி விட்டு பெயரை குறிப்பிடுவது சிரமம்.

    தேர்தலில் வேட்பாளர், கூட்டணி அமைப்பது என அனைத்திலும் சாதியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் தி.மு.க., தமிழக மக்களை அறியாமையில் உள்ளவர்கள் என்று எண்ணும் போக்கை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×