search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் காய்கனி கழிவுகள் சேகரிப்பதற்கு  குப்பை தொட்டிகள் வழங்கிய காட்சி.
    X
    மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் காய்கனி கழிவுகள் சேகரிப்பதற்கு குப்பை தொட்டிகள் வழங்கிய காட்சி.

    அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்- மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

    கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் நடைபெற்றது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி மற்றும் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் திருப்பூர் குமரன் சிலை அருகே நடைபெற்றது. 

    இந்நிகழ்ச்சியில் மாஸ்டர் குமரேசன், மாநில முதன்மை பொது செயலாளர், தமிழ்நாடு பொது செயலாளர் மேற்கு, தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பினர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் கொரோனா விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து பேசியதாவது:-

    பொதுமக்கள் அரசின் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு வழி முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டம் கூடுவதையும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். =

    அரசு அலுவலகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களின் அலுவலகங்கள், வங்கிகள், கணினி மையங்கள், நிதி நிறுவனங்கள், தொலை தொடர்பு அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள், அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள், மளிகைக்கடைகள், காய்கறி அங்காடிகள், அரிசி மண்டிகள், கோழி, ஆடு போன்ற இறைச்சி கடைகள் , மீன் கடைகள் அனைத்திலும் அரசு வழிமுறைகளை கடைபிடித்து கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து கையுறை, முககவசம் மற்றும் காய்கனி கழிவுகள் சேகரிப்பதற்கு 200 குப்பை தொட்டிகள் ஆகியவற்றை வழங்கினார்.
    Next Story
    ×