search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

    உடுக்கம்பாளையம் ஊராட்சியில் பணியாற்றி வந்த ராஜ்குமார் பூலாங்கினர் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    உடுமலை:

    உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூலங்கினர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்த புவனேஸ்வரி பெரிய கோட்டை ஊராட்சி செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    பெரியகோட்டை ஊராட்சியில் பணியாற்றி வந்த கந்தவடிவேல் வடபூதிநத்தம் ஊராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார். வடபூதிநத்தம் ஊராட்சி யில் பணியாற்றி வந்த காயத்ரி ஆலம்பாளையம் ஊராட்சிக்கும்  மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆலம்பாளையம் ஊராட்சியில் பணியாற்றி வந்த சிவகுமார் குரல்குட்டை ஊராட்சிக்கும், குரல் குட்டை ஊராட்சியில் பணியாற்றி வந்த சந்திரகலா உடுக்கம்பாளையம் ஊராட்சிக்கும்மாற்றப்பட்டுள்ளனர்.

    உடுக்கம்பாளையம் ஊராட்சியில் பணியாற்றி வந்த ராஜ்குமார் பூலாங்கினர் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ரெனால்டு ஷெல்டன் பெர்னாண்டஸ் பிறப்பித்துள்ளார்.
    Next Story
    ×