search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கவுண்டம்பாளையத்தில் ரூ.2½ லட்சம் இன்டர்நெட் பைப்பை திருடிய 4 பேர் கைது

    கவுண்டம்பாளையத்தில் ரூ. 2½ லட்சம் இன்டர்நெட் பைப்பை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (28).

    இவர் கோவை கவுண்டம்பாளையத்தில் தங்கி தனியார் செல்போன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

    அதே கம்பெனியில் கவுண்டம்பாளையம் மீனாட்சி அம்மன் நகரைச் சேர்ந்த ரகு (26) என்பவர் செல்போன் இன்டர்நெட் பைப்பை அமைக்கும் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று வீரசேகர் கவுண்டம்பாளையத்தில் இருந்து டி.வி.எஸ் நகர் வரை இன்டர்நெட் பைப் அமைக்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ரகுவிடம் கொடுத்தார்.

    பின்னர் வீரசேகர் அங்கு சென்று பைப் சரியா அமைக்கப்பட்டுள்ளதா என பரிசோதனை செய்தார். அப்போது அங்கு பைப் அமைக்கப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ரகுவிடம் கேட்டார்.

    அப்போது ரகு முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த வீரசேகர் இதுகுறித்து துடியலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ரகு மற்ற செல்போன் கம்பெனி ஊழியர்களான குனியமுத்தூரை சேர்ந்த சுரேஷ் குமார் (35), மதுக்கரையைச் சேர்ந்த செந்தில்குமார் (38), புதுக்கோட்டையைச் சேர்ந்த தினேஷ் (28) ஆகியோருடன் சேர்ந்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×