search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை
    X
    ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை

    தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு -வழிபாட்டு தலங்களுக்கு புதிய கட்டுப்பாடு

    தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு நிலவரங்களுக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. அவ்வகையில், தற்போது நடைமுறையில் உள்ள, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்டு 9-ந்தேதியுடன் முடிகிறது.

    இதையடுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்கவும், கொரோனா விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

    நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கண்காணிப்பு குழுக்கள் வீடு வீடாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடும். மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இறைச்சி, மீன் சந்தைகளில், கடைகளை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×