search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கூட்டுறவு சங்க தலைவரிடம் செல்போன் பறிப்பு

    மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஸ்கூட்டருக்கு முன்னால் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஊருக்கு வழி கேட்பது போல் பன்னீர்செல்வத்திடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள குரல்குட்டையை  சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 63). தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் உறவினரை பார்ப்பதற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி  கொண்டிருந்தார்.

    அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வரவே  ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இந்தநிலையில்  அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஸ்கூட்டருக்கு முன்னால் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஊருக்கு வழி கேட்பது போல் பன்னீர்செல்வத்திடம் பேச்சு கொடுத்துள்ளனர்.

     திடீரென்று அவரிடமிருந்த செல்போனை மற்றும் ரூ.700-ஐ பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் குடிமங்கலம்  போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்து சென்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×