search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகள் செல்போனில் இணையதளம் மூலம் தங்களுடைய மதிப்பெண்ணை பார்த்த காட்சி
    X
    மாணவிகள் செல்போனில் இணையதளம் மூலம் தங்களுடைய மதிப்பெண்ணை பார்த்த காட்சி

    சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வில் தமிழ்நாட்டில் 100 சதவீதம் தேர்ச்சி

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத தமிழ்நாட்டில் 39 ஆயிரத்து 360 மாணவர்கள் மற்றும் 31 ஆயிரத்து 109 மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, நாகலாந்து, மிசோரம், மேகாலயா, லட்சத்தீவு, கோவா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இருப்பதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 39 ஆயிரத்து 360 மாணவர்கள் மற்றும் 31 ஆயிரத்து 109 மாணவிகள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் ஒரு மாணவர் மட்டும் தோல்வி அடைந்தார். ஆனாலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல், புதுச்சேரியை பொறுத்தவரையில், 2 ஆயிரத்து 182 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து, அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.


    Next Story
    ×