search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா விதிகளை மீறிய கடைக்கு அதிகாரிகள்  சீல் வைத்த காட்சி.
    X
    கொரோனா விதிகளை மீறிய கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த காட்சி.

    கொரோனா விதிகளை மீறிய கடைக்கு 'சீல்'

    திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள கடைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று மாநகராட்சி பணியாளர்கள் இன்று ஆய்வுபணியில் ஈடுபட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர் களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 985ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 116 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 211ஆக உள்ளது.

    மேலும், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 933 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 841ஆக உள்ளது.

    தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. இந்தநிலையில் இன்று  திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள கடைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று   மாநகராட்சி பணியாளர்கள் இன்று  ஆய்வுபணியில்  ஈடுபட்டனர்.

    தாராபுரம் சாலையில் உள்ள கடையில் ஆய்வு செய்த போது ஒரு கடையில்  சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம்  செய்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    Next Story
    ×