search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

    ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்து தக்காளிபழங்களை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.
    உடுமலை:

    உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் தக்காளி சாகுபடி அதிகமாக உள்ளது. விவசாயிகள் தக்காளி பழங்களை உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு வருகின்றனர். அங்கு கமிஷன் மண்டி உரிமையாளர்கள் அந்த தக்காளிபழங்களை ஏலம் விடுகின்றனர். 

    ஏலத்தில் வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்து தக்காளிபழங்களை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். ஏலத்தொகையில் கமிஷன் தொகையை எடுத்துக்கொண்டு மீதி பணத்தை விவசாயிகளுக்கு கொடுக்கின்றனர். தற்போது தக்காளி வரத்து அதிகமாக உள்ளதால் உடுமலை சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளது.

    உடுமலை நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள கமிஷன் மண்டிகளில் 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி தரத்தை பொறுத்து ரூ.70 முதல் ரூ.170 வரை ஏலம்போனது. தற்போது ஒருபெட்டி தக்காளி தரத்தைப்பொறுத்து ரூ.70 முதல் ரூ.140 வரை விற்றது. ஒரே நாளில் பெட்டிக்கு ரூ.30 குறைந்தது. 

    இப்போது செடியில் இருந்து தக்காளி பழங்களை பறிப்பதற்கு கூலி ஆட்கள் சரியாக கிடைப்பதில்லை. அதனால் அதிக கூலி கொடுத்து பறித்து வரப்படும் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
    Next Story
    ×