search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்தவர்... கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய ஜனாதிபதி

    சட்டப்பேரவையில் நீணடகாலம் தனது பங்களிப்பை வழங்கிய கருணாநிதி, மக்களின் முன்னேற்றத்திற்காக பலவேறு திட்டங்களை செயல்படுத்தியதாக ஜனாதிபதி பேசினார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்பட திறப்புவிழா இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

    தமிழக சட்டப்பேரவை பல்வேறு சிறப்பு மிக்க வரலாறுகளை கொண்டது. சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வது பெருமைக்குரிய விஷயம். கருணாநிதியின் படத்திறப்பு விழாவில் கலந்துகொள்வதிலும் பெருமை கொள்கிறேன். மக்களாட்சி இந்த சட்டப்பேரவையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவையை உருவாக்க நீதிக்கட்சியைச் சோந்தவர்கள் முயற்சி எடுத்தார்கள். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு இந்த சட்டமன்றம் உதவியாக இருந்தது.

    வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர் கருணாநிதி. அறியாமைக்கும், ஏழ்மைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் கருணாநிதி. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக்கொடுத்தவர். சட்டப்பேரவையில் நீணடகாலம் தனது பங்களிப்பை வழங்கியவர். மக்களின் முன்னேற்றத்திற்காக பலவேறு திட்டங்களை செயல்படுத்தியவர். திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர் கருணாநிதி.

    இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.

    Next Story
    ×