search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருச்சி உள்ளிட்ட மத்திய மண்டலங்களில் அதிகரிக்கும் கொரோனா 3-ம் அலை

    பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டுமே தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. கடந்த இருவாரமாக இரட்டை இலக்க எண்களை தாண்டவில்லை.
    திருச்சி:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதேபோன்று திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மத்திய மண்டலத்திலும் சில நாட்களாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    தஞ்சாவூரில் நேற்றைய தினம் அதிகபட்சமாக 124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த இரு வாரங்களை ஒப்பிடும்போது அதிகமாக இருக்கிறது. திருச்சியிலும் நேற்றைய தினம் 70 பேருக்கு தொற்று உறுதியானது. 50-க்குள் சென்ற கொரோனா பாதிப்பு மீண்டும் 100-ஐ நோக்கி செல்வது, கொரோனா 3-வது அலையாக இருக்குமோ என்று சுகாதாரத்துறையை விழிப்படைய செய்துள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் கூட 53 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 39 பேருக்கும், புதுக்கோட்டையில் 23 பேருக்கும், அரியலூரில் 21 பேருக்கும், மயிலாடுதுறையில் 16 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 14 பேருக்கும் என 9 மாவட்டங்களிலும் நேற்றைய தினம் 360 பேருக்கு தொற்று உறுதியானது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டுமே தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. கடந்த இருவாரமாக இரட்டை இலக்க எண்களை தாண்டவில்லை.

    வணிக நிறுவனங்களில் ஆடித்தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளதால் வழக்கத்துக்கு மாறாக கடைகளில் அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது. ஆகவே வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் நோய் தொற்று நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும். விதிமீறும் நபர்களுக்கு அபாராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×