search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் சாமளாபுரம் குளம்
    X
    வண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் சாமளாபுரம் குளம்

    ஆடிப்பெருக்கு விழா- வண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் சாமளாபுரம் குளம்

    சாமளாபுரம் குளத்தில் ஆடி பெருக்கையொட்டி நம்ம குளம் - திருவிழா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மேற்கு ரோட்டரி, நொய்யல் நீர் மேலாண்மை அறக்கட்டளை மற்றும் சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியன இணைந்து சாமளாபுரம், பள்ளபாளையம் குளங்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து  குளங்கள் முற்றிலும் தூர்வாரப்பட்டு குளத்தின் மத்தியில் தீவு திடல் அமைக்கபட உள்ளது.

    குளத்தின் கரையோரத்தை சுற்றிலும் அலங்கார வர்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை மறுநாள் அதிகாலையில் குளத்தில் கணபதி பூஜை, வருண பகவான் பூஜை, வருண ஜெபம், வருண யாகம் மற்றும் ருத்திர யாக பூஜை நடைபெற உள்ளது. 

    தொடர்ந்து குளத்துக்கு அரிசி மாற்றும் நிகழ்வு, தீவுத்திடலில் மரக்கன்று நடுதல், குளத்துக்கு ராஜ வாய்க்காலில் இருந்து வரும் நீருக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்படும். மேலும் கொரோனா மற்றும் நீர் நிலை பாதுகாப்பு கலை நிகழ்ச்சி, நம்மகுளம் திருவிழா, பெண்களுக்கு மஞ்சள் சரடு வழங்கல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×