search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

    பார் மூடப்பட்ட நிலையில் மது அருந்த அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    திருப்பூர்:

    டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மற்றும் ‘பார்’களில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தது.

    இது போன்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும் முறைகேடுகள் நேராத வகையிலும் மதுக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ள டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    அவ்வகையில் திருப்பூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள இரண்டு மதுக்கடை ‘பார்’களில் கோவை மண்டல முதுநிலை மேலாளர் சோதனை நடத்தினார்.  அப்போது பார் மூடப்பட்ட நிலையில் மது அருந்த அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    Next Story
    ×