search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நீர்மட்டம் குறைந்ததால் குளங்களில் மண்மேடுகளை அகற்ற கோரிக்கை

    பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தின் போது குளங்களுக்கு தளி வாய்க்கால் வழியாக தண்ணீர் வழங்கப்பட்டது.
    உடுமலை:

    உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து அரசாணை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்படுகிறது. 

    இதில் ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம், செட்டிக்குளம், தினைக்குளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், வலையபாளையம் குளம் ஆகிய குளங்களின் வாயிலாக  2,786 ஏக்கர் நேரடிப்பாசனமும்  பல ஆயிரம் ஏக்கர் நிலத்தடி நீர் மட்டத்திற்கும் உதவியாக உள்ளது.

    பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தின் போது குளங்களுக்கு தளி வாய்க்கால் வழியாக தண்ணீர் வழங்கப்பட்டது. பருவமழை போதியளவு பெய்யாத நிலையில் குளங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பள்ளபாளையம் அருகே அமைந்துள்ள  செங்குளம் 74.84 ஏக்கர் பரப்பளவு உடையதாகும். குளத்தின் வாயிலாக 285 ஏக்கர் நிலம் நேரடி பாசன வசதி பெறுகிறது.

    குளத்தில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் உபரி நீர் வெளியேறும் ஷட்டர் உள்ளிட்ட பகுதிகளில் மண் மேடுகள் அதிகரித்துள்ளது. இவற்றை அகற்றினால் குளத்தில் கூடுதலாக தண்ணீர் தேக்க முடியும்.

    எனவே அணையில் இருந்து  தண்ணீர் திறப்புக்கு முன்  இப்பணிகளை துவக்க பொதுப்பணித்துறையினருக்கு  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×