search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை அரசு ஐ.டி.ஐ.,யில்மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

    விண்ணப்ப கட்டணமாக 50 ரூபாயை டெபிட், கிரெடிட்,நெட் பாங்கிங் மற்றும் ஜி-பே வாயிலாக செலுத்தலாம்.
    உடுமலை:

    உடுமலை அரசு ஐ.டி.ஐ.,யில், 10- ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மாணவ, மாணவிகளுக்கு எலக்ட்ரிசியன், மோட்டார் மெக்கானிக், பிட்டர் ஆகிய தொழில்பிரிவுகளும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வயர்மேன், வெல்டர் பிரிவிலும், தொழிற்பயிற்சி கற்றுத்தரப்படுகிறது.

    இப்படிப்புகளில் சேர 2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆக., 4-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தொழிற்பயிற்சி படிப்புக்கு, www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண். மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், போட்டோ, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை விண்ணப்பத்துடன் சேர்ந்து  விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப கட்டணமாக 50 ரூபாயை டெபிட், கிரெடிட், நெட் பாங்கிங் மற்றும் ஜி-பே வாயிலாக செலுத்தலாம். விண்ணப்பிக்கத்தெரியாதவர்கள் மேற்கண்ட சான்றிதழ்களுடன் கொழுமம் ரோடு, சி.என்.ஆர்., மார்க்கெட் வளாகத்திலுள்ள ஐ.டி.ஐ., அலுவலகத்தை நேரில் அணுகலாம். மேலும் விபரங்களுக்கு, 04252-223340, 9499055700, 9499055701 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தொழிற்பயிற்சி நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×