search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன சோதனையில் ஈடுப்பட்ட போலீசார்.
    X
    வாகன சோதனையில் ஈடுப்பட்ட போலீசார்.

    கொரோனா பரவலை தடுக்க உடுமலை கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை

    உடுமலை அரசு மருத்துவ மனையில் 67 மற்றும் 76 வயது மூதாட்டிகளும், 70 வயது முதியவரும், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 72 வயது முதியவரும் இறந்தனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 87 ஆயிரத்து 723ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்த 127 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 85 ஆயிரத்து 833 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 1,062 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
     
    உடுமலை அரசு மருத்துவ மனையில் 67 மற்றும் 76 வயது மூதாட்டிகளும், 70 வயது முதியவரும், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 72 வயது முதியவரும் இறந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 825 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைகள், நிறுவனங்களில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். முக்கிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.  

    நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திருப்பூர் பழைய மார்க்கெட், தென்னம்பாளையம் மார்க்கெட்டுகளில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.  

    மேலும் உடுமலை சின்னாறு தமிழக-கேரள எல்லை பகுதியில் வனத்துறை மற்றும் போலீசார் சார்பில் தீவிரமாக வாகன சோதனை நடத்தப்படுகிறது. கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அங்கிருந்து தமிழகம் வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு  கொரோனா பரி சோதனையும் செய்யப்படுகிறது. அதன் பிறகே அங்கிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
    Next Story
    ×