search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூரில் பறிமுதல் வாகனங்கள் ரூ.11 லட்சத்திற்கு ஏலம்

    போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் முன்னிலையில் வடக்கு தாசில்தார் ஜெகநாதன், வாகன ஏலம் நடத்தினார்
    திருப்பூர்:

    போலீசார் பறிமுதல் செய்யும் வாகனங்கள் கேட்பாரற்ற நிலையில் இருக்கும் போது குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் ஏலத்தில் விற்கப்படும். போலீசார் அளிக்கும் வாகன விவரங்களை கொண்டு வருவாய்த்துறை மூலம் ஏலம் நடத்தப்படுகிறது.

    திருப்பூர் வடக்கு சரகத்திற்கு உட்பட்ட 3 போலீஸ் நிலைய எல்லையில் 117 வாகனம், ரெயில்வே போலீஸ் எல்லையில் 128 என 245 மோட்டார் சைக்கிள்கள்  பறிமுதல் செய்து கேட்பாரற்ற நிலையில் இருந்தன. அவை முறையான முன்னறிவிப்பு செய்து ஏலத்தில் விடப்பட்டன.

    திருப்பூர் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் ஏலம் நடந்தது. போலீஸ் உதவி கமிஷனர் வெற்றி வேந்தன் முன்னிலையில் வடக்கு தாசில்தார் ஜெகநாதன், வாகன ஏலம் நடத்தினார். 

    ஏலத்தில் பங்கேற்க தலா ரூ.5ஆயிரம் ‘டிபாசிட்’ செலுத்தி 138 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஏலத்தில் அனைத்து வாகனங்களும் ஏலம் விடப்பட்டன. மொத்தம் ரூ.11.72 லட்சத்திற்கு ஏலம் போனது. ஏலம் கோராதவருக்கு ‘டிபாசிட்’ தொகை திரும்ப வழங்கப்பட்டது.
    Next Story
    ×